பணமும்.. வெற்றியும் வேண்டுமா..? முதலில் இதை கைவிடுங்கள்..!

webdesign in trichy , trichy webdesign

வாழ்விலும், வர்த்தகத்திலும் வெற்றியாளராகத் திகழ வேண்டுமெனில் நீங்கள், முதலில் உங்கள் மனதை நேர்மறையாகச் சிந்திக்கப் பயிற்சியளிக்க வேண்டும். அதுமட்டும் போதாது ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். வெற்றியை சந்திக்கவும் மற்றும் மிகப்பெரிய பணக்காரராகவும் ஆவதற்கு, நீங்கள் இலக்கைப் தீர்மானித்து, அதை நோக்கி உறுதியாக இருந்து கடினமாக உழைக்க வேண்டும். இந்த முழுமையான செயல்முறையின் போது உங்கள் பாதைக்குத் தடையாகச் செயல்படும் சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். நீங்கள் உங்களை அழிக்கக்கூடிய பழக்க வழக்கங்களைக் கண்டிப்பாகக் கைவிட்டுவிட்டு, இறுதி இலக்கின் மீது மட்டுமே கவனத்தைச் செலுத்த வேண்டும். வாழ்வில் வெற்றிகரமாகவும் பணக்காரராகவும் திகழவேண்டும்மெனில் நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டிய 7 விஷயங்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

1. சிறு தூக்கம் அலாரம் அடிக்கும் சமயத்தில் தூக்கத்தைத் தொடர்வதற்கான ஸ்னூஸ் பொத்தானை அழுத்தாதீர்கள். காலையில் உற்சாகம் மற்றும் வெடிக்கும் ஆற்றலுடன் எழுந்திருங்கள். இது உங்கள் நாளின் வேகத்தைச் சரியாக அமைக்கும். சிறு தூக்கத்திற்கான அலாரத்தின் பொத்தானை அழுத்துவதில்லை என்று உங்களுக்கு நீங்களே உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் உறுதிமொழியை ஒருபோதும் உடைக்காதீர்கள்.

2. காலைச் சிற்றுண்டி மற்றும் மதிய சாப்பாட்டைத் தவிர்த்தல்: நீங்கள் கண்டிப்பாக நன்றாகவும் மற்றும் ஆரோக்கியமான உணவையும் சாப்பிட வேண்டும், அப்போது தான் வேலை செய்யும் நேரங்களில் களைத்து விடாமல் இருப்பீர்கள். சிலர் வேலை செய்யும் நேரங்களில் பசியினால் கோபமடைந்து விடுவார்கள். இது அவர்களைச் சுற்றிலும் எதிர்மறையான தாக்குதலை ஏற்படுத்தும். ஒரு நாளின் பகல் பொழுதுகளில் உங்கள் வயிற்றைக் காலியாக வைக்காதீர்கள்.

3. நீங்கள் செய்ய விரும்பாத விஷயங்களுக்குச் சரி என்று சொல்லுதல்: உங்கள் உள்ளுணர்வைக் கவனித்துக் கேட்பதற்கு நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் உள்ளார்ந்த உணர்வு அதை உன்னால் செய்ய முடியாது என்று கூறினால், அதை நிராகரியுங்கள்.

4. அதிகமாகச் செலவழித்தல் நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாகச் செலவு செய்யாதீர்கள். உங்கள் வருமானத்தைச் சேமியுங்கள். சேமிப்பு உங்களுக்கு நெடுங்காலத்திற்கு உதவியாக இருக்கும். இன்று நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும், எதிர்காலத்தில் பல லட்சங்களாக மாறும். எனவே இன்று முதல் சேமிக்கத் துவங்குங்கள்.


5. தாமதம் முற்பகல் 11 மணிக்கு உங்களுக்கு ஒரு சந்திப்பு இருக்கிறதென்றால் குறித்த காலத்திற்கு முன்பே அவ்விடத்தை அடைந்து விடுங்கள் ஆனால் தாமதத்தைக் காட்டாதீர்கள். இது நீங்கள் உடனடியாகப் பள்ளந்தோண்டி புதைக்க வேண்டிய ஒரு கெட்டப் பழக்கமாகும்.


6. சாக்குப் போக்கு சொல்லுதல் உங்கள் தவறுகளுக்குச் சுயப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் மற்றும் உங்கள் சொந்த தவறுகளுக்கு நொண்டிச் சாக்குகள் சொல்லாதீர்கள் அல்லது உங்கள் சொந்த தவறுகளுக்கு அடுத்தவர்களைப் பழிக்காதீர்கள். நீங்கள் மற்றவர்களுக்குச் சரியான முன்னுதாரணத்தை அமைத்துத் தர வேண்டும்.

7. கட்டுப்படுத்துதல் இதை நேர்மையாகப் புரிந்து கொள்ளுங்கள் - எல்லாவற்றையும் நீங்களே தனியாகச் செய்துவிட முடியாது. நீங்கள் மற்றவர்களையும் கட்டாயம் நம்ப வேண்டும் மற்றும் வேலையைப் பகிர்ந்தளிக்க வேண்டும்


EGS - இன் பிற பயனுள்ள இணையதளங்கள்